NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு..!

ஜப்பானில் உள்ள நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு-வடகிழக்கு திசையில் இன்று காலை 4.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 5.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, கட்டிடங்களில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles