NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூன் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி!

ஜூன் மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி இம்மாதம் பணவீக்கம் 12 சதவீதமாக குறைவடைந்துள்ளது.  

இதன்படி, ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக பதிவாகியிருந்து.

மே மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.1 சதவீதமாக  குறைந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் 27 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் 16.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.  

Share:

Related Articles