NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெட் ப்ளூ விமானத்தில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூயோர்க்கிலுள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று (08) இரவு 11 மணிக்குப் பிறகு இந்த விமானம் தெற்கு புளோரிடா விமான நிலையத்திற்கு சென்றடைந்தது.

குறித்த விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சடலங்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும்    தெரியாத நிலையில், அவர்கள் இருவரும் எவ்வாறு தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர் என்பது தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles