NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெருசலேம் நகரின் பஸ் தரிப்பிடத்தில் துப்பாக்கிச் சூடு!

ஜெருசலேம் நகரின் நுழைவுப் பகுதியில் இன்று காலை (30) பரபரப்பான நேரத்தில் ஆயுதங்களுடன் வந்த இருவர், பஸ் தரிப்பிடத்தில் இருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் மேகன் டேவிட் ஆடம் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில்,தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவப் பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் தாக்குதல் குறித்த விசாரணைகளை தொடர்வதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles