NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெரொம் பெர்னாண்டோவால் தாக்கல் செய்யப்பட்ட மனு – நீதிமன்றத்தின் உத்தரவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை உயர் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (05) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மனுவில் தலையிட்டு சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Share:

Related Articles