NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – சஜித்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதை போல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிங்களப் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரிக்க குழுக்களை நியமிக்கவேண்டும் என சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரிச்சட் சொய்சா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ், பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்திலும் இந்த ஆட்சியாளர்கள் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles