NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜோ பைடன் – ஷி ஜின்பிங்  சந்திப்பு

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையியே தொடரும் பதற்ற நிலைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலாான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இருவரும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும்.

தைவான், தென்சீனக் கடல், இஸ்‌ரேல் – ஹமாஸ் போர், உக்ரேன் – ரஷ்ய போர், வடக்கொரியா – தென்கொரியா மற்றும் மனித உரிமைகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பும் நீண்ட காலமாகவே இணக்கம் காணவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து பைடன் மற்றும் ஷி ஜின்பிங் பேச உள்ளனர்.

இச்சந்திப்பு இராணுவம், போதைப்பொருள் கடத்தல், செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுவரும் சச்சரவுகளைச் சற்று தணிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share:

Related Articles