NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்..!

டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எலான் மஸ்க், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், டொனால்ட் டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் இராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பாதுகாப்புத் திட்டத்தில் பெரிய பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் துப்பாக்கிதாரி 130 மீற்றர் தூரத்திலிருந்து டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles