NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டில்ஷான் மதுஷங்கவுக்கு அபராதம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் டில்ஷான் மதுஷங்கவுக்கு போட்டி கட்டணத்தில் 10 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 14 அன்று நடைபெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, எல்.பி.எல் நடத்தை விதி 2.5ஐ, மீறியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் ஆட்டமிழக்கும்போது இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டக்கூடிய மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது கள நடுவர்களால் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles