NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்குவால் யாழில் மேலுமொரு மரணம் பதிவு!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில், நேற்று (26) மாத்திரம் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் 71 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles