நாட்டில், டெங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் நோக்கில் நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் கியூபா அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள வெள்ளநீர் மட்டம் முழுமையாக வடிந்தோடியதன் பின்னர் சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.