NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவை கட்டுப்படுத்த செயலணி ஒன்று நியமனம்.!!

தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ. கலுகபுஆரச்சி  தெரிவித்தார்.


இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.


இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கீதிகா ரத்னவர்தன தெரிவிக்கையில், இந்த எண்ணிக்கையில் 1,800 பேர் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.


மேலுமத், டெங்கு அபாயம் உள்ள 70,000 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், 471 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

Share:

Related Articles