டென்னிஸ் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த 3 டென்னிஸ் வீரர்களுக்கு 3 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள், சிவெஸ்டர் இம்மானுவேல், கிறிஸ்டின் பால், ஹெண்ட்ரி சட்செ ஆகியோருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெல்ஜியத்தில் செயற்பட்டுவரும் சூதாட்டம், மெட்ச் பிக்சிங்க் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையில் 3 வீரர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததுடன், அதனையடுத்து, 3 வீரர்களுக்கும் தலா 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சூதாட்டத்தில் ஈடுபட்ட இம்மானுவேல், கிறிஸ்டின் பால் ஆகிய 2 பேரும் 3 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரான ஹெண்ட்ரி சட்செனுக்கு இரண்டரை ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.