டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லி மாநிலத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், கட்சி தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், தனது உத்தரவாதத்தை டெல்லி மக்கள் நம்பியதற்காக தான் தலைவணங்கி நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்களுக்கு முழு மனதுடன் டெல்லி அன்பை அளித்துள்ளது என்றும், இதேபோன்ற இரட்டிப்பு அன்பை தாமும் டெல்லி மக்களுக்கு திருப்பித்தர உறுதியளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.