NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகள்:  அஸ்வின் சாதனை

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒன்பதாவது பந்துவீச்சாளர் ஆனார்.

இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த மைல்கல்லை எட்டினார். 

விசாப்பட்டணத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முடிவில் ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் 499 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். மற்றும் மூன்றாவது டெஸ்டின் 2 ஆவது நாளான நேற்று ஜாக் க்ராலியின் விக்கெட்டை வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் தனது 500 ஆவது விக்கெட்டை எடுத்தார்.

டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளைத் விஞ்சிய ஒன்பதாவது பந்துவீச்சாளர் அஸ்வின், அதேநேரம், அனில் கும்ப்ளேவுக்குப் பின்னர் இந்தியாவின் ஒரே பந்து வீச்சாளர்.

முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே மற்றும் நாதன் லயன் ஆகியோர் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வினை விட முன்னிலையில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.

2011 நவம்பரில் தனது டெஸ்டில் அறிமுகமான அஸ்வின், டெஸ்டில் இந்தியாவின் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக இருந்தமையும் விசேட அம்சம்.

அஸ்வின் 98 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார், முத்தையா முரளிதரனுக்குப் பின்னர் டெஸ்ட் வரலாற்றில் மைல்கல்லை எட்டிய இரண்டாவது வேகமான சாதனையாக இது அமைந்தது.

ஏனைய ஏழு பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை எடுத்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 34 ஐந்து விக்கெட்டுகளையும், 8 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles