NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6 சுற்றுலாப் பயணிகள் ஒரே அறையில் சடலங்களாக மீட்பு!

தாய்லாந்தின் மத்திய பெங்கொங்கில் பாதும் வான் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6 சுற்றுலாப் பயணிகள் ஒரே அறையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அறுவரில் வெளிநாட்டைச் சேர்ந்த 3 பெண்களும் உள்ளடங்குவர்.

இவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளை பதிவு செய்திருந்தபோதும் அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ஆறு பேரும் விஷம் அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உடற்கூறு ஆய்வில் அவர்களது மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரிய வரும்போது தான் விசாரணை வேறு கோணத்துக்கு மாறும்.

Share:

Related Articles