NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு..

சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் அமைச்சு ஏற்பாட்டில் குறித்த திட்டம் தொடர்பான நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது, கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் காணப்படும் தவறான கொள்கைகளினால் இன்று பலர் நிவாரணங்களை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒரு நாடு வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தால், நிவாரணங்களை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டு 3 இலட்சத்து 40,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles