கேகாலை தெதிகம ஜயலத் கந்த பிரதேசத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் சென்றுள்ள நிலையில் தந்தை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் நேற்றிரவு (28) வேட்டையாடச் சென்ற வேளையில் இடம்பெற்றுள்ளது.
மகன் சுட்டதில் தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.