NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை கொலை செய்த மாமா…!

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டவெவ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share:

Related Articles