NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் பஸ்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பஸ்களும் புகைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகைப் பரிசோதனைக்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாத நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதுபற்றி இந்த வாரத்தில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புகைப் பரிசோதனை தொடர்பாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சங்கம் என்ற ரீதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles