இந்தியா தமிழ்நாடு திண்டுக்கல்லிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றிரிவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.