இந்தியா தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் ( SCRUB TYPHUS) எனும் பக்றீரியா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் அந்த நோயட தாக்கம் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும்.
ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை தாக்கும் போது அவர்களுக்கு ஸ்கரப் டைபஸ் நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை இந்த நோய் தாக்கத்தின் முக்கிய அறிகுறிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலிசா இரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறிய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் என்பன நோய் எதிர்ப்பு மருந்துகளாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை விவசாயிகள், வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றம் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.