NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று – விழாக்கோலமாக காட்சியளிக்கும் விழுப்புரம் மாவட்டம்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (27) மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி அதிகாலை முதலே தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

வி.சாலை அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து செல்கின்றனர்.

நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலமாக காட்சியளிக்கின்றது.

அத்தோடு, 100 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles