தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு இடையில் நேற்று உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து விஜய், பிரசாந்த் கிஷோர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும், இதுதொடர்பான எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விஜய் – பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பு முக்கியமான சந்திப்பாக மாறியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.