NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. 

நா.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. 

குறித்த நிகழ்வில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சாந்திசிறிஸ்கந்தராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வன்னிமாவட்டத்தில் இம்முறை தமிழரசுக்கட்சி சார்பாக,

 முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன் வைத்தியர் ப.சத்தியலிங்கம்,ஆசிரியர் கா. திருமகன்,சமூக செயற்ப்பாட்டாளர் தே. சிவானந்தராசா ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்வ. கமலேஸ்வரன் சட்டத்தரணி செ. டினேசன்,

 சட்டத்துறை மாணவிஅ. கலீபா ஹலிஸ்ரா

ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles