NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழீழ தலைவர் பிரபாகரன் மகள் எனக்கூறும் வீடியோவால் சர்ச்சை!

உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் நேற்று (27) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோவால் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோவில் பேசிய அவர், “எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின் உங்களை நான் சந்திக்கிறேன். தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது.”

“ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என எந்த நாடும் இதுவரை உதவவில்லை. ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என கூறிய எந்த நாடும் இதுவரை உதவவில்லை. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது.”

“தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது,” என்று பேசியுள்ளார்.

உண்மையில் வீடியோவில் தோன்றி பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Share:

Related Articles