NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை-விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழாவினை இன்று நடாத்துகின்றது.

நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், உங்களுக்கு பிடித்த துறை தேர்வு செய்துகொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்து பேசி நல்ல துறையை தேர்வு செய்யுங்கள்.

மருத்துவர்களும், பொறியாளர்களும், வழக்குரைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான். தலைவர் என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்ல. எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும் அந்தந்த துறைகளில் தலைமைப் பதவிக்கு வர முடியும்.

மேலும், ‘say no to drugs’ என போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழியையும் ஏற்க வைத்துள்ளார்.

Share:

Related Articles