கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை இடைநிறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன விடுத்த பணிப்புரையை இடைநிறுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதன்படி ,பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கான கடிதங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான மனுவை தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்திருந்தார்.