NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த செப்டம்பர் 15, அன்று நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் நேர்மையை மீறியதன் மூலம் மாணவர்கள்,   மற்றும் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் அரசால் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

3 வினாக்களுக்கான விடைகளும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என நீதியரசர்கள் யசந்த கோதாகொட, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் மேலும் அறிவித்தது.

அதன்படி, இப்பிரச்சினையில் நிபுணர்கள் குழு வழங்கிய பொருத்தமான பரிந்துரைகளில் ஒன்றைத் தொடருமாறும், அத்தகைய முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பித்து முடிப்பதற்கும், முடிவுகளை இறுதி செய்வதற்கும் உயர் நீதிமன்றம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.

மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுமாறும் தீர்ப்பளித்துள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles