NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரவரிசையில் சறுக்கிய வனிந்து ஹசரங்க.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரவரிசையில் T 20 களத்தில் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக முதலிடம் பெற்ற இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க, சமீபத்திய தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். அந்த தரவரிசையில் சகலதுறை வீரர்களில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கடந்த சில போட்டிகளில் கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் வனிந்து ஹசரங்க தரவரிசையில் பின்தள்ளப்பட்டுள்ளார்.இதேவேளை தற்போது நடைபெற்று வரும் T20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதுவும் சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles