NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்

கனடாவின் ஹாலிபேக்ஸ் (Halifax) விமானநிலையத்தில் ‘எயார் கனடா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கிய போது, அதன் லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டமையால், இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி, விமானத்தல் திடீரென தீ பற்றியது.

இதற்கிடையில் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles