NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தவறான தகவல் குறித்து IOC நிறுவனம் விளக்கம்!

இலங்கையில் தற்போது வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளை அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என IOC நிறுவனம் கூறியதாக வெளியாகியுள்ள செய்தியை IOC நிறுவனம் நிராகரித்துள்ளது.

எரிபொருள் தாங்கிகளை அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என IOC நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது என்று ஆங்கில குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் இந்நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்களில் அதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், லங்கா IOC நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது முற்றிலும் பொய்யான செய்தி என அறிவித்துள்ளது.

Share:

Related Articles