NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் மகள் கர்ப்பம்!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால், அந்த பெண்ணின் கணவர் பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த நபர், சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொண்டு அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்ற பின்னர் அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், இந்நிலையில், குறித்த சிறுமி சுகவீனமுற்றமையால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் மூன்று மாதம் கருவுற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் வைத்தியர்களினால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்படடுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles