NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய்லாந்தில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.

அந்நாட்டின் முன்னாள் இராணுவ தளபதி பிரயுத்சான் ஈசா பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே இராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14ஆம்; திகதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பார்வர்டு கட்சி, பியூ தாய் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றன. இராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.

இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் வெறும் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றன. பிரதமர் பிரயுத் சான் ஒக்சாவின் கட்சி 36 இடங்களை கைப்பற்றியது.

தேர்தல் முடிவுகளை அடுத்து தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இராணுவ ஆட்சி முடிவுக்கு வரப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சி அமையவுள்ளது.

பார்வர்டு கட்சி மேலும் சில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்றும் பிடா லிம்ஜாரோ என்ரட்டா பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த பிரதமர் யார் என்பதற்காக வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles