NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய்வானில் நிலநடுக்கம் – இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர்..

தாய்வானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் இன்னும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களில், டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் மட்டும் சுமாா் 450 போ் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, இந்நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நேற்று 13ஆக அதிகரித்தது.தாய்வானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமாா் 18 கிலோமீற்றர் தொலைவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான அது, கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும்.

Share:

Related Articles