NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய், மகள் இருவரையும் தாக்கிவிட்டு பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்றவர் கைது!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு ஹபாயா அணிந்து பெண் வேடமிட்டும் தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாக்குதல் நடாத்திய 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான தாய் வயது (54) ,மகள் வயது (31) ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும் மகள் கந்தளாய் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 ஈச்ச நகர் பகுதியில் குறித்த தாயிடம் கடனுக்கு பணம் வாங்கிய நிலையில் அதனை மீளப் பெறுவதற்காக தாக்குதல் மேற்கொண்ட நபரின் கடைக்கு சென்று கேட்டுள்ளார் இதனை பொருட்படுத்தாது குறித்த தாயின் வீட்டுக்கு சென்று கத்திக் குத்து தாக்குதலை நடாத்தி விட்டு தப்புவதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே தப்பித்துக் கொள்ள முயற்சித்த நிலையிலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூரை பிறப்பிடமாகவும் ஈச்ச நகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது சம்பவ இடத்துக்கு சென்று தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்துள்ள தம்பலகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles