நைஜீரியாவின் பிலடியோ மாகாணம் பசா பிஜி என்ற கிராமத்தில் பாடசாலையொன்றின் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மாடிக் கட்டிடமுள்ள குறித்த பாடசாலையில், சுமார் 150 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதுடன் அவர்களில் 132 பேர் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆரம்பத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் வழக்கம்போல் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.