இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் மழை பெய்ததால், தலைநகரைச் சூழ்ந்திருந்த நச்சுப் புகை சிறிதளவு நீங்கியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாநில அரசும், வானிலை ஆய்வாளர்களும் இணைந்து செயற்கை மழை திட்டத்தை செயற்படுத்தத் தயாராக இருந்த நிலையில் மழை பெய்துள்ளது.
இருப்பினும், உலக காற்றுத் தரக் குறியீட்டின்படி, புதுடெல்லியில் காற்று மாசுபாடு இன்னும் 407 ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.