NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க மறுப்பு!

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் வைத்திய குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் உடல் மீதான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமையினால், சடலத்தை தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது என வைத்தியர்கள், நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகள் முடிவடைந்திருந்தால், சடலத்தை தம்மிடம் கையளிக்குமாறு, உறவினர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

சடலத்தை வழங்க முடியாது என பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திர ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles