NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திபெத் நாட்டில் நிலநடுக்கம்!

தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு
நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ரிச்டராக இது பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கிய நிலையில், இதனால் பொதுமக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனினும் உயிர் சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கடியில் 150 கிலோமீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவு கோலில் இது 4.1 ரிச்டராக பதிவாகி இருந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Share:

Related Articles