திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இக்குண்டு தாக்குதல் நேற்று (14) நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் தாக்குதலில் உயிர்ச்சேதங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனவும், மருந்து வழங்கும் இடம் மாத்திரமே சேதமாகிவுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மருந்தகத்தில் காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் வைத்தியசாலைக்கு 07 மணியளவில் பெட்ரோல் குண்டு தாக்குதல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்துடன் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.