NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருநங்கைகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை!

சர்வதேச கிரிக்கெட் சபையின் நேற்றைய கூட்டத்தின் போது புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவ்விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளூர் போட்டிகளுக்கு அந்நாடுகளின் பாலின வரையறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் கலந்து கொண்ட முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டின் ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த டேனியல் மெக்காஹே, அவுஸ்திரேலியா நாட்டில் பிறந்த அவர். கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்து, கனடாவிற்காக விளையாடி வருகிறார்.

Share:

Related Articles