NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருமணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை – கிரிக்கெட்டில் சுவாரஸ்யம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் திருமணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4ஆவது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் 2002ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி திருமணம் முடித்தார். 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.

அதுபோல இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி 2010ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.

அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி திருமணம் செய்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றார்.

இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

Share:

Related Articles