(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்வரும் வருடம் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார் என தீர்க்கத்தரிசியான பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குறிப்பின்படி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மர்ம நோய் ஒன்றினால் பாதிப்புக்குள்ளாகி உயிர் துறப்பார் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாபா வங்கா பல்கேரிய நாட்டை சேர்ந்த தீர்க்கத்தரிசி ஆவார். 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி தனது கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பின்னர் பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார். பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளன. இதனால் இவரை தலைச்சிறந்த தீர்க்கத்தரிசி என்று பலரும் போற்றி வருகின்றனர்.
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரித்தானிய இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன.
இதன்காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர். 2023ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகின்றன.
அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றது போல் ரஷ்ய – யுக்ரைன் போர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினினால் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது. அவரது கணிப்புப்படியே பிரித்தானிய ராணியின் மரணமும் நிகழ்ந்தது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்கத்தரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரேம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறித்த பாபா வங்காவின் கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2024ஆம் ஆண்டில் புட்டின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாபா வங்காவின் இந்த கணிப்புதான் தற்போது எதிர்காலம் குறித்து அறிய ஆர்வம் காட்டுபவர்களை உலுக்கி உள்ளது. மேலும் ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
மேலும் 2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2024ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என்றும் தனது கணிப்புகளின் மூலம் எச்சரித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2024ஆம் ஆண்டுக்கான தீர்க்கத்தரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.