NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தீவிரமடையும் டெங்கு நோய் – கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மரணங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அதிக ஆபத்துள்ள டெங்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை மீண்டும் 50ஆக அதிகரித்துள்ளது.

வருடத்தில் 53,700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles