இந்தியாவின், பெரம்பலூர் மாவட்டத்தில் ‘பார்வோ வைரஸ்’ பரவல் அதிகரித்துள்ளதால் இரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய்க் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.
தெருநாய்கள் மட்டுமல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்ட நாய் உட்கொண்ட உணவு, அருந்திய தண்ணீர், மலத்தின் மூலமாகவும் நோய் பாதிப்புக்குள்ளான நாய்களை பராமரிக்கும் மனிதர்கள் தொடுவதாலும் ஏனைய நாய்களுக்கும் பரவுகிறது.
நாய்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டது 5 முதல் 7 நாட்களுக்குள் தெரிய வரும். தொடர்ந்து பசியில்லாமல் போகுதல், காய்ச்சல், உடல் வெப்பம் குறைதல், வாந்தி, இரத்தம் கலந்த துர்நாற்றத்துடன் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதன் காரணமாக அதிகமான நீர் வெளியேறி நாய் உயிரிழந்துவிடும். அதிலும் நாய் குட்டிகள் என்றால் 2,3 நாட்களில் இறந்துவிடும்.இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால், நாய் குட்டிகள் இத் தாக்குதலுக்கு உட்படும் முன்பு அவற்றுக்கு தடுப்பூசி செலுத்துவதே.
மேலும் இது தொடர்பில் கால்நடை பாதுகாப்பு துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.