NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துணுக்காய் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

லைக்கா ஞானம் அறக்கட்டளை உலகளாவிய ரீதியில் பல்வேறு பொதுநலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இலங்கை வாழ் மக்களுக்கும் வாழ்வாதார உதவிகளை செய்துகொடுப்பதில் முக்கிய பங்காளனாக இன்று விளங்கி வருகிறது.

அந்தவகையில், முல்லைதீவு – துணுக்காய், ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கொப்பிகள் அடங்கிய கற்றல் உபகரணப் பொதி வழங்கி நற்கரம் நீட்டியமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles