NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இலங்கைக்கு 18 பதக்கங்கள்..!

15வது சர்வதேச உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை துப்பாக்கி சுடுதல் சம்பியன்ஷிப் 06 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

உலகின் 12 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் புளூஃபோன்டைனில் கடந்த 03ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் புஷ்பகுமார கலந்து கொண்ட போட்டியில் 40க்கு 40 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும், புஷ்பகுமார இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார். மேலும், கேப்டன் ஹசங்க 02 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

அத்துடன் 20 வயதுக்குட்பட்ட இலங்கையின் கனிஷ்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொண்ட ரயால் லியனகே 03 தங்கப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளதுடன், ஜெனித் ரத்நாயக்க வெள்ளிப் பதக்கமும் 02 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்பதற்காக இலங்கை ரைபிள் சங்க அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Share:

Related Articles