(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சில மாநிலங்களுக்கு ஆயுதங்கள் இன்றி தடியடிகளை மட்டுமே கொண்டு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சாதாரண பொலிஸ் கடமைகள் இருப்பதாகவும் விக்னேஸ்வரன் எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளார்.