NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துருக்கி கப்பலை கடத்த முயற்சி !

பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்த துருக்கி சரக்கு கப்பல் ஒன்றுக்குள் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த ஒரு கும்பல் கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நப்லேஸ் பகுதியின் தெற்கு பகுதியில் இருக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களில் சிலர் ஆயுதமேந்தி இந்த செயலில் ஈடுபட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பலை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை இத்தாலி பாதுகாப்பு மந்திரி உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles